மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

அத்திவரதரை தரிசித்த குடியரசுத் தலைவர்!

அத்திவரதரை தரிசித்த குடியரசுத் தலைவர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தை காண லட்சக் கணக்கான மக்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் என பலரும் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர், இந்நிலையில் இன்று (ஜூலை 12) அத்திவரதரை தரிசனம் செய்வதற்காகக் குடியரசுத் தலைவர் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்துக்கு வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர். பச்சையப்பாஸ் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிக்காப்டர் தளத்தில் இறங்கி, அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 3.05 மணியளவில் சென்றார். அங்கு அவருக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டாச்சாரியார்கள் பூரணகும்ப மரியாதை வழங்கினர். அவரது பெயருக்கு அர்ச்சனை செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அத்திவரதர் தரிசனத்தின் போது வரதராஜ பெருமாள் கோயில் வரலாற்றையும் குடியரசுத் தலைவர் கேட்டறிந்தார். அவருக்கு அத்திவரதரின் புகைப்படங்கள் பரிசளிக்கப்பட்டன. அவருடன் தமிழக ஆளுநர் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

கோயிலில் தரிசனம் முடிவடைந்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் 3.50 மணியளவில் மீண்டும் சென்னை புறப்பட்டார். இன்று ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை மாலை 4.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு செல்லவுள்ளார்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019