மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

விற்பனைக்கு வரும் ‘மேட் இன் இந்தியா’ ஐபோன்!

விற்பனைக்கு வரும் ‘மேட் இன் இந்தியா’ ஐபோன்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளன.

அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான ஆப்பிள், உலகம் முழுவதிலும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து விற்பனை செய்கிறது. அந்தந்த நாட்டிலேயே தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் உற்பத்திச் செலவுகள் குறைவாக இருக்கும் என்பதால், விற்பனைக்கான பெரிய சந்தை வாய்ப்புள்ள நாடுகளில் உற்பத்தி ஆலை அமைக்கும் பணியிலும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாகத் திகழும் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு ஆலை அமைக்கும் முயற்சியில் ஆப்பிள் ஈடுபட்டது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்கள் அதிவிரைவில் விற்பனைக்கு வருகின்றன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் எக்ஸ் ஆர் மற்றும் ஐபோன் எக்ஸ் எஸ் ஆகிய ஐபோன்கள் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல்கள் இன்னும் பெறப்படவில்லை என்பதால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஐபோன்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஆப்பிள் நிறுவன அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ஐபோன்களுக்கு இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருந்தாலும் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் ஐபோன் விற்பனையும் அதன் வருவாயும் மிக மந்தமாகவே இருந்து வருகிறது. இதனால் சீன ஸ்மார்ட்போன்களுடன் ஆப்பிள் ஐபோன்கள் போட்டியிடமுடியவில்லை. இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ஐபோன்களின் விலை குறைவாக இருக்கும் என்பதால் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon