மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

திமுக எம்.பி மீது வழக்கு!

திமுக  எம்.பி  மீது வழக்கு!

வனக்காவலர்களை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எஸ்.ஆர்.பார்த்திபன். இவர் மீது வனச்சரக அலுவலர் திருமுருகன் மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார்.

அதில், “வனவர் வடிவேலுவுடன் கூட்டு தணிக்கை மேற்கொண்ட போது வேடன் கரட்டின் அடி வாரத்தில் இரும்பு கம்பத்தால் ஆன செக்போஸ்ட் அமைக்கப்பட்டு ஒரு செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தொடர்பு கொண்டு நீங்கள் யார் என்று கேட்ட போது எனது பெயர் பழனிசாமி, சேலம் தி.மு.க. எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபனின் வேலையாள். அந்த இடம் எம்.பி.க்கு சொந்தமானது, யாரையும் அனுமதிக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அரசு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் பேரில் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்பட 4 பேர் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீதான வழக்குப் பதிவை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த நிலம் தொடர்பான விவகாரத்துக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அது ஜோடிக்கப்பட்ட பொய்வழக்கு எனவும் அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் எஸ்.ஆர்.பார்த்திபன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon