மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

வறுமை: இந்தியாவில் 27 கோடி பேர் மீட்பு!

வறுமை: இந்தியாவில் 27 கோடி பேர் மீட்பு!

இந்தியாவில் பல பரிமாணத்தில் வறுமையில் இருந்த 27 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா வளர்ச்சி அமைப்பு, ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் ஆகியன , பண வரவு மட்டுமின்றி சுகாதாரம், ஊட்டச்சத்து, சமையல், வேலையின் தரம், அச்சுறுத்தல், வன்முறை என பல பரிமாணத்தில் வறுமைத் தொடர்பாக ஆய்வு நடத்திக் கடந்த வியாழன் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”2005-06 மற்றும் 2015-16, ஆகிய 10 ஆண்டுகள் காலகட்டத்தில் இந்தியா 27 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் வறுமைக் கோட்டில் இருந்து அதிக பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், அங்கு 2005 முதல் அடுத்த 10 ஆண்டுகளில் 74.9 சதவிகிதமாக இருந்த வறுமை சதவிகிதம் 46.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஜார்க்கண்டைத் தொடர்ந்து பிகார், மத்தியப் பிரதேசம் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 குறைந்த வருமானம், 68 நடுத்தர வருமானம் மற்றும் 2 உயர் வருமானம் கொண்ட 101 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 130 கோடி பேர் வறுமையில் பிடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. வங்கதேசம், கம்போடியா, காங்கோ, எத்தியோப்பியா, ஹைதி, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, வியட்நாம் ஆகிய நாடுகளில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பங்களாதேஷ் 2004 முதல் அடுத்த பத்து ஆண்டுகளில் 19 லட்சம் பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் 2005-06 ஆம் ஆண்டில் 44.3 சதவிகிதமாக இருந்த ஊட்டச்சத்து பற்றாக்குறையை 2015-16 ஆம் ஆண்டில் 21.2 சதவிகிதமாகவும், குழந்தை இறப்பு 4.5 சதவிகிதத்திலிருந்து 2.2 சதவிகிதமாகவும், சமையல் எரிபொருள் இல்லாத மக்களின் எண்ணிக்கையை 52.9 சதவிகிதத்திலிருந்து 26.2 சதவிகிதமாகவும், சுகாதாரமற்ற மக்களின் எண்ணிக்கையை 50.4 சதவிகிதத்திலிருந்து 24.6 சதவிகிதமாக, குடிநீர் இல்லாதவர்கள் எண்ணிக்கையை 16.6 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019