மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

இயக்குநர் சங்கத் தேர்தல்: நிராகரிப்பின் பின்னணி!

இயக்குநர் சங்கத் தேர்தல்:  நிராகரிப்பின் பின்னணி!

இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் அமீர் அணியின் இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட பின்னணி வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கான அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கபட்டது. அதே போல், அமீர் அணியின் சார்பிலே இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மனுதாக்கலின் போது, கடைசி நேர நிராகரிப்பைத் தவிர்ப்பதற்காக ஒரே அணியைச் சேர்ந்த அமீர், எஸ்.பி. ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் அமீரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் விதி எண் 20ன்படி , அமீர் விதியை மீறி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.பி.ஜனநாதனுக்கு முன் மொழிதல் செய்திருப்பதால், அமீர் மற்றும் ஜனநாதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இதனால் அமீர் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் பொதுச்செயலாளர் பதவிக்கும், தலைவர் பதவிக்கு ஜனநாதனும் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுதாக்கல்கள் ஏற்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில், தலைவர் பதவிக்கு எஸ்.பி. ஜனநாதனும் ஆர்.கே செல்வமணியும் எதிரெதிர் அணியில் போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஜூலை 12)வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 13) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனவும் இன்று மாலை அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon