மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

இந்தியாவின் முதல் எத்தனால் பைக்!

இந்தியாவின் முதல் எத்தனால் பைக்!

இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கான Apache RTR 200 Fi E100 மாடலை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இன்று (ஜூலை 12) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை 2018ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் பார்வைக்காக வைத்திருந்தது. இந்த பைக் தற்போது வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்த பைக் விற்பனை செய்யப்படும். இந்த பைக்கிற்கு ரூ.1.20 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வண்டியின் உச்சகட்ட திறன் [email protected] rpm ஆகும். எத்தனாலில் இயங்கும் வாகனம் என்பதை குறிப்பதற்காக எத்தனாலின் குறியீடும் இந்த பைக்கில் பொறிக்கப்பட்டுள்ளது. தாவரங்களிலிருந்து உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நச்சுத்தன்மையற்ற, இயற்கைக்கு ஏற்ற, பாதுகாப்பான எரிபொருள் எத்தனால். மேலும், சேமித்து வைக்கவும் இடம் மாற்றவும் உகந்ததாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், வாகனப் புகையில் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டையாக்ஸைடு, துகள்கள் வெளிப்படுவதை எத்தனால் குறைக்கிறது.

எத்தனாலை முக்கிய எரிபொருளாக பயன்படுத்த தொடங்குவதால் சுற்றுச்சூழல் நன்மைகள் மட்டுமல்லாமல் பொருளாதார நலன்களும் இருக்கின்றன. பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை குறைத்து, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி, செலவைக் குறைக்க எத்தனால் பயன்படுகிறது. இந்த வண்டி குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் பேசுகையில், “எலெக்ட்ரிக் வாகனங்கள், மாற்று எரிபொருட்கள் என இன்றைய இருசக்கர வாகன தொழில்துறை பசுமை சார்ந்த தீர்வுகளை கண்டறிந்து வருகிறது.

எத்தனாலில் இயங்கும் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக இருக்கும் என டிவிஎஸ் நிறுவனம் நம்புகிறது. வாகனத்தின் திறனிலும், விலையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் சுற்றுச்சூழலில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை கொண்டுவருவதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார். இந்த வாகனத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடன் நிதி ஆயோக் தலைமை செயலதிகாரி அமிதாப் காந்த், வேணு சீனிவாசன் ஆகியோரும் இருந்தனர்.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon