மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜூலை 2019

கழுதை மேய்த்தீர்களா? சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த ஜெகன்

கழுதை மேய்த்தீர்களா? சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த ஜெகன்

காலேஸ்வரம் அணை விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில சட்டமன்றத்தி்ல் விவசாயிகள் பிரச்சினை மற்றும் வட்டியில்லாக் கடன் வழங்குவது குறித்து நேற்று நடைபெற்ற விவாதத்தில் முதல்வர் தவறான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார் என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக முதல்வர் மீது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அவை உரிமை மீறல் தீர்மானம் வழங்கப்பட்டது.அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, “அவைக்கு தவறான தகவல்களை ஜெகன்மோகன் அளித்துள்ளார் என நாங்கள் நிரூபித்தால் அவர் பதவி விலகத் தயாரா” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கம் அளித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசிக்கொண்டிருக்கும் போது, தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆவேசமடைந்த ஜெகன், சந்திரபாபு நாயுடுவை நோக்கி, “ஆளுங்கட்சியான நாங்கள் 150 பேர் இருக்கிறோம். அனைவரும் எழுந்து வந்தால் நீங்கள் தரையில் கூட அமர முடியாது. முதலில் உங்கள் எம்.எல்.ஏ.க்களை இருக்கையில் அமரச் சொல்லுங்கள்” என்றார்.

முன்னதாக நேற்று சட்டமன்றத்தில் அணைகள் தொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, காலேஸ்வரம் திட்டத்தின் துவக்க விழாவில் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டது தொடர்பாக விமர்சித்தார்.இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதால் ஆந்திராவுக்கு கிடைக்கும் நீர் அளவு குறைவதாக தெரிவித்த அவர், “நம் மாநிலத்தில் நடைபெறும் பொலாவரம் அணைக்கட்டு திட்டத்தை விரைந்து முடிப்பதில் ஆர்வம் காட்டாமல் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்படும் திட்டத்தில் கலந்துகொள்வதன் அவசியம் என்ன” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு காட்டமாக பதிலளித்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிகாலத்தில்தான் தெலுங்கானா அரசு காலேஸ்வரம் அணைத் திட்டத்தை ஆரம்பித்தது. அப்போது அதனை தடுக்காமல் சந்திரபாபு நாயுடு என்ன கழுதை மேய்த்துக்கொண்டிருந்தாரா? நான் அங்கு சென்றிருக்காவிட்டாலும் அந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கும். அண்டை மாநிலங்களுடன் நான் நல்லுறவை கடைபிடிப்பது உங்களுக்கு என்ன பிரச்சினை” என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, “எனக்கு 40 வருடங்கள் அரசியல் அனுபவம் உள்ளது. உங்கள் வயது எனது அனுபவம். தொடர்ந்து அவமரியாதையாக பேசுவது சரியல்ல” என்று தெரிவித்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வெள்ளி 12 ஜூலை 2019