மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

பிளாஸ்டிக் தடை: அரசாணை செல்லும்!

பிளாஸ்டிக் தடை: அரசாணை செல்லும்!

மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட அரசாணை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 11) உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2019ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது. பிளாஸ்டிக் பயன்பாடு உள்ள இடங்களில் அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருட்களைக் கைப்பற்றியும் அபராதமும் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிளாஸ்டிக்குக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கே உரிமை உண்டு மாநில அரசுக்கு உரிமை இல்லை. பிஸ்கட் மற்றும் சிப்ஸ் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு விலக்களித்து பிறப்பித்த அரசாணை சட்ட விரோதமானது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல், வனத் துறையையும், மத்திய ரசாயன துறையையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து, இம்மனு தொடர்பாகப் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில், “நாடு முழுவதும் 16 மாநிலங்களில் பிளாஸ்டிக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு விளைவிக்க கூடியவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாற்று தொழிலுக்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஜூலை 11) நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பிளாஸ்டிக்குக்குத் தடை விதிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தொடர்ந்து பிளாஸ்டிக் கவர்களில் விற்கப்படும் ஆவின் பால் உள்ளிட்டவற்றை பாட்டில்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இல்லையெனில் பிளாஸ்டிக்குக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon