மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 10 டிச 2019

மீண்டும் இணைந்த ‘வணக்கம் சென்னை’ஜோடி!

மீண்டும் இணைந்த ‘வணக்கம் சென்னை’ஜோடி!

வணக்கம் சென்னை படத்தைத் தொடர்ந்து சுமோ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது சிவா-பிரியா ஆனந்த் ஜோடி.

2013ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான படம் வணக்கம் சென்னை. சிவா-பிரியா ஆனந்த் நடித்த அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹோசிமின் இயக்கத்தில் உருவாகும் சுமோ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது இந்த ஜோடி.

இப்படத்திற்கு ராஜிவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றார். மணிரத்மனின் கடல் திரைப்படத்திற்குப் பின் ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் படமிது. சர்வம் தாள மயம் படத்தை இயக்கிய ராஜிவ் மேனன், கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்த பின் சுமோ படத்தின் பணிகளில் இணைந்துள்ளார்.

சுமோ என்ற ஜப்பானிய மல்யுத்ததை அடிப்படையாகக் கொண்ட முதல் இந்தியப் படமிதுவாகும். சமீபத்தில் இப்படக்குழு ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது. பல கட்ட ஆடிஷனுக்குப் பிறகு 18 சுமோ வீரர்களை இப்படத்திற்காக தேர்வு செய்திருக்கிறது படக்குழு. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யனமான பொழுது போக்கு அம்சங்களுடன் இப்படம் தயாராகிவருகிறது. இப்படத்திற்கு சிவா வசனமும் எழுதியுள்ளார். யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் பரபரப்பாக இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது சுமோ.

மேலும் படிக்க

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

நியூசிலாந்துக்கு 'விதி' செய்த 'சதி'!

தயாராகிறது பாகுபலி 3?

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


செவ்வாய், 16 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon