மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 10 டிச 2019

நெட்ஃப்ளிக்ஸ் நோக்கி படையெடுக்கும் பாலிவுட்!

நெட்ஃப்ளிக்ஸ் நோக்கி படையெடுக்கும் பாலிவுட்!

தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்கள் நெட்ஃப்ளிக்ஸ் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தி வரும் நிலையில், ஷாருக் கானும் அனுஷ்கா ஷர்மாவும் நெட்ஃப்ளிக்ஸில் புதிய சீரிஸ்களைத் தயாரிக்கவுள்ளனர்.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் இந்திய சீரிஸ்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான சேக்ரட் கேம்ஸில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், சைஃப் அலிகான், ராதிகா ஆப்தே போன்ற முக்கியமான நட்சத்திரங்கள் பங்களித்தனர். மீரா நாயர் இயக்கத்தில் ஹூமா குரேஷி பிரதான பாத்திரத்தில் நடித்த லெய்லா பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பல சீரிஸ்கள், நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகும் படங்கள் என பாலிவுட் இணைய பிளாட்ஃபார்மை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவதில் இந்திய சினிமாவின் முன்னோடியாக விளங்குகிறது. அதே நேரம் படைப்பு சுதந்திரம், எல்லைகளைத் தாண்டி பார்வையாளர்களை அடையும் எளிமையான வெளி ஆகிய சாத்தியங்களால் நெட்ஃப்ளிக்ஸ் பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், பீட்டால் என்ற தலைப்பில் நெட்ஃப்ளிக்ஸில் ஒரு ஜாம்பி த்ரில்லரை தயாரிக்கவுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. அதே நேரம் அனுஷ்கா ஷர்மா ‘மை’ என்ற சீரிஸை அவரது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

ஷாருக் கான் சில நாட்களுக்கு முன் படங்களில் நடிப்பதற்குத் தற்காலிகமாக தான் இடைவெளி விட்டுள்ளதாக அறிவித்தார். தொடர்ச்சியாக அவரது படங்கள் சந்தித்த தோல்வியாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் எண்ணம் மேலோங்கியதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஆனால் தயாரிப்பாளராக இவர் முன்னெடுக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஷாருக் கான் தயாரிப்பில் தாப்ஸி - அமிதாப் பச்சன் நடித்த பத்லா பாக்ஸ் ஆபீஸில் பெரும் வசூலை ஈட்டியதுடன் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.

புல்புல் என்ற படத்துக்குப் பின் நெட்ஃப்ளிக்ஸுடன் மீண்டும் கைகோத்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

தயாராகிறது பாகுபலி 3?

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


புதன், 17 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon