மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 10 டிச 2019

‘கோகோ’க்கு ‘ஓகே’ சொன்ன சிவகார்த்தி

‘கோகோ’க்கு ‘ஓகே’ சொன்ன சிவகார்த்தி

கோலமாவு கோகிலா பட இயக்குநருடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் தயாராகிவருகின்றது. பாண்டிராஜ் இயக்கத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. அதைப்போல பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ஹீரோ படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடவுள்ளனர். இந்தப் படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன், இவானா என இரு நாயகிகள் நடிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இணையும் புதிய படத்தின் திரைக்கதை பணிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், விரைவில் அப்படம் தொடங்கவுள்ளது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ஆரம்பகாலத்திலிருந்தே நண்பர்களான நெல்சனும் சிவாவும் இப்படத்தின் மூலம் திரையிலும் இணையவுள்ளனர். ‘கோகோ’ படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியது, கனா படத்தில் சிவகார்த்திகேயனின் கெளரவ தோற்றத்துக்கு நெல்சன் திலீப்குமார் என பெயர் வைத்ததும் நட்பின் அடிப்படையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்திலிருந்து இப்புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் படம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க

அடிக்கப் பாய்ந்த சத்யா - அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

தயாராகிறது பாகுபலி 3?


வியாழன், 18 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon