மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 10 டிச 2019

அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் இணையும் ரஜினி

அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் இணையும் ரஜினி

ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தர்பார் படத்தைத் தொடர்ந்து, அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குநர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கற்பனைக்கு தீனி போடுவது வழக்கம். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் கவனம் செலுத்தி வரும் வேளையில், அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக செய்திகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ரஜினியை ஏற்கனவே இயக்கிய பா. ரஞ்சித், கே.எஸ். ரவிகுமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் அதிகளவில் அப்பட்டியலில் இடம்பெற்றது.

இந்த நிலையில், ரஜினியின் அடுத்த இயக்குநர் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிறுத்தை சிவா என்பது தெரியவந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசமும் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது. விஸ்வாசம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும், படத்தின் குடும்ப சென்டிமென்டையும் பெரிதும் ரசித்த ரஜினி, சிவாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்த சிறுத்தை சிவா, ரஜினியின் அழைப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளார். ரஜினிகாந்தின் படத்திற்குப் பின் சூர்யாவின் படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தர்பார் படப்பிடிப்பு முடிந்த அடுத்த இரண்டு மாதங்களில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

மேலும் படிக்க

அடிக்கப் பாய்ந்த சத்யா - அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா

தயாராகிறது பாகுபலி 3?


வியாழன், 18 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon