மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 29 பிப் 2020

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு ஸ்பெஷல் - பீட்ரூட் வடை

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு ஸ்பெஷல் - பீட்ரூட் வடை

செட்டிநாடு விருந்தின்போது தலைவாழை இலையில் இனிப்புப் பலகாரம், சித்ரான்னம், தயிர் பச்சடி, கூட்டு, பொரியல், பச்சடி, பிரட்டல், மண்டி, ஊறுகாய், வடை, சிப்ஸ், அப்பளம், அன்னம் (சாதம்) என எல்லாம் இடம்பெறும். முதலில் அன்னத்துக்குப் பருப்பு மற்றும் நெய் பரிமாற வேண்டும். பிறகு குழம்பு, பிறகு ரசம், பிறகு மோர். இப்படி கமகமக்கும் செட்டிநாடு சமையலின் சிறப்பிடம் பெறுவது பீட்ரூட் வடை.

என்ன தேவை?

பீட்ரூட் துருவல் - ஒன்றரை கப்

கடலைப்பருப்பு - ஒரு கப்

துவரம்பருப்பு - கால் கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

காய்ந்த மிளகாய் - 8

சோம்பு - அரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்

நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பீட்ரூட் துருவலைப் பிழிந்து சாறு எடுக்கவும். பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு பீட்ரூட் சாறு சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருண்டைகளை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

என்ன பலன்?

உடல் எடை குறைய வேண்டும். அதே சமயத்தில் உடலுக்குத் தேவையான சத்துகளும் கிடைத்து விட வேண்டும் என்பது தான் நம்மில் பலரும் எதிர்பார்க்கும் விஷயம். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதனால் உடல் எடையைக் குறைக்க முடியும். கொழுப்பை முற்றிலுமாகத் தவிர்க்காமல் கொழுப்பு குறைவான உணவுகளைச் சாப்பிடலாம். அப்படி அனைத்து சத்துகளையும் உள்ளடக்கியது இந்த பீட்ரூட் வடை.

நேற்றைய ரெசிப்பி: வெண்டைக்காய் மண்டி


மேலும் படிக்க


தினகரன் உத்தரவு: புலம்பும் பழனியப்பன்


விஜய் பட ஷூட்டிங்: விபத்தில் சிக்கியவர் மரணம்!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நக்கல்-துரைமுருகன் அப்செட்!


புறக்கணிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?


பன்னீரும் அமித் ஷாவும்: தோல்விக்கு காரணம் சொல்லும் எடப்பாடி


ஞாயிறு, 11 ஆக 2019

chevronLeft iconமுந்தையது