மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!

மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!வெற்றிநடை போடும் தமிழகம்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் மற்ற திரையுலகினரைவிட பைரஸி பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்த் திரையுலகம்தான். பெரிய ஹீரோக்களின் பட ரிலீஸுக்கு முன்பு நீதிமன்றத்துக்குச் சென்று திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி தீர்ப்பினைப் பெறுவது வழக்கம். அப்படியிருந்தும் ஒரு சில நாட்களில் தரமான பிரின்டுகளை ரிலீஸ் செய்து திரைப்படத் துறையை அதிர்ச்சியடைய வைப்பார்கள் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர். அப்படி ரிலீஸாகும் படங்களின் லிங்குகள் (LINK) சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்படும் வேலையை சைபர் க்ரைம் துறையினர் தொடர்ந்து செய்வார்கள்.

தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழிப் படங்களையும் சட்ட விரோதமாக வெளியிட்டுவரும் தமிழ் ராக்கர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ்கள் என எந்தப் படைப்பையும் விட்டுவைப்பதில்லை. காப்பி ரைட் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டுவரும் நிலையில் தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்காக இடம்பெற்ற ‘மேன் Vs வைல்டு’ நிகழ்ச்சியையும் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் தமிழ் ராக்கர்ஸ் குழுவினர்.

டிஜிட்டல் இந்தியா பற்றி பேசிவரும் மோடியின் நிகழ்ச்சியையே திருட்டுத்தனமாக வெளியிட்டுவரும் தமிழ் ராக்கர்ஸுக்கு எதிரான குரல்கள் ஹாலிவுட்டிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஹாலிவுட் சினிமாக்களைத் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் வெப் சீரிஸ்களை தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுகிறது. எனவே, அந்த இணையதளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். அப்போது எப்போதெல்லாம் புதிய படங்கள் வெளியாகிறதோ, அப்போது படங்களைத் திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவிடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் பெயர்களில் செயல்பட்டு வரும் டொமைன்களை உடனடியாக முடக்க வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon