மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

ஹாங்காங்: எல்லையில் குவியும் சீனப் படைகள்?

ஹாங்காங்: எல்லையில் குவியும் சீனப் படைகள்?

ஹாங்காங் எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்சைக்குரிய மசோதாவை எதிர்த்து மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஜனநாயக ஆதரவுக்குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் பதவி விலக வேண்டும் என்றும் ஒப்படைப்பு மசோதாவை முழுமையாக திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 5 முக்கிய கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை(ஆக.11) அன்று போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டை வீசியது காவல்துறை. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக ஹாங்காங் விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் போராட்டக்காரர்கள். இந்நிலையில், இன்று காலை முதல் போராட்டக்காரர்கள் விமான நிலையத்திலிருந்து கலைந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் விமானங்கள் புறப்பட்டுள்ளன. மேலும் அடுத்தடுத்து பறக்கவுள்ள விமானங்களின் அட்டவணைகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனா தனது ராணுவப் படைகளை ஹாங்காங் எல்லையில் நிறுத்தி வருவதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப். தனது டிவிட்டர் பக்கத்தில் “சீன அரசு ஹாங்காங் எல்லைக்கு தனது ராணுவங்களை நகர்த்துவதாக எங்கள் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. எல்லோரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்!” எனக் கூறியுள்ளார்.

சீன ஊடகங்கள் ஹாங்காங்கை போர் மண்டலப் பகுதியாக குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் தீவிரமாகும் பதற்றம்!


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon