மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

கழிவறையுடன் புதிய அரசு பேருந்துகள்!

கழிவறையுடன் புதிய  அரசு பேருந்துகள்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான 500 புதிய பேருந்துகளின் சேவையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 14) தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 5000 பேருந்துகள் ரூ.1500 கோடி மதிப்பில் வாங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதிலிருந்து புதிய பேருந்துகளின் சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 555 பேருந்துகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இன்று, 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய பேருந்துகளைச் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது துணை முதல்வர் பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 235 பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு 118 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் 60, கும்பகோணம் 25, விழுப்புரம் 18, கோவை 16, மதுரை 14, நெல்லைக்கு 14 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதிகள் கொண்டவை ஆகும்.

இந்த பேருந்துகளில் பயணிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் தானியங்கி கதவுகள், இருபுறமும் அவசரக்கால வழிகள், மாற்றித் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், , இறங்கும் இடத்தை தெரிவிப்பதற்கான, ஒலி அழைப்பான், படுக்கை வசதி உட்படப் பல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon