மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

கார் டெலிவரி: 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

கார் டெலிவரி: 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து டீலர்களுக்கு விநியோகிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் 19 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகிறது. உற்பத்திச் செலவுகள் உயர்வு, உதிரிப் பாகங்களுக்கான இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றோடு பணிநீக்கமும் பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் வாகன உற்பத்தியைக் குறைத்தும், வாகனங்களின் விலையை உயர்த்தியும் வருகின்றன. இதனால் ஜூலை மாதத்தில் கார் விற்பனையில் 35.95 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதாவது ஜூலை மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 1,22,956 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. ஆனால், 2018ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 1,91,979 விற்பனை செய்யப்பட்டிந்தன. இந்நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து டீலர்களுக்கு விநியோகிக்கப்படும் கார்களின் எண்ணிக்கையிலும் 19 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் மொத்தம் 2.9 லட்சம் கார்கள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2019 ஜூலையில் 2 லட்சமாகக் குறைந்துள்ளது. இது 31 சதவிகித வீழ்ச்சியாகும். அதேபோல, இருசக்கர வாகனங்களின் விநியோக எண்ணிக்கையும் 18.2 லட்சத்திலிருந்து 17 சதவிகித வீழ்ச்சியுடன் 15.1 லட்சமாகக் குறைந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் பிரிவில் 26 சதவிகிதமும், மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் 8 சதவிகிதமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை மாதத்தில் மொத்தம் 22.2 லட்சம் வாகனங்கள் மட்டுமே டீலர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 2018 ஜூலையில் இந்த எண்ணிக்கை 22.4 லட்சமாக இருந்தது. இது கடந்த 19 ஆண்டுகளில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon