மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

நிலவை நெருங்கும் சந்திராயன் 2!

நிலவை நெருங்கும் சந்திராயன் 2!

புவிவட்டப் பாதையிலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் வரும் 20ஆம் தேதி அன்று நிலவின் சுற்றுப்பாதையை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில், இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலனை அனுப்பியுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திராயன் 2 முதன்முதலாக படம் பிடித்த பூமியின் படத்தை, இஸ்ரோ ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட்டது. அதன் பின், ஆக.6 ஆம் தேதி, 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மேற்கொண்டனர். இதற்காக இன்று அதிகாலை 2.21 மணிக்கு விண்கலத்தில் உள்ள திரவ என்ஜின் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்திரனை நோக்கிச் செல்லும் பாதைக்கு விண்கலம் சென்றது.

சந்திராயன் 2 வரும் 20ஆம் தேதி சந்திரனின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்துவிடும் என இஸ்ரோவின் தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், நிலவைச் சுற்றத் தொடங்கியதும் சரியான இடத்தை தேர்வு செய்து, சந்திராயன் 2 நிலவில் இறங்கவுள்ளது எனக் கூறியுள்ளார்.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon