மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவின் நிலை!

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவின் நிலை!

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் சூழல் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், ஐநாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான விவகாரம். இரு நாடுகளும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது” என்று ஆகஸ்ட் 9ஆம் தேதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்ற அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரான ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா, அமெரிக்கச் செய்தி நிறுவனத்திடம் ஆகஸ்ட் 13ஆம் தேதி பேசுகையில், “காஷ்மீர் பிரச்சினையில் தீர்வுகாண்பது இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு பிரச்சினையாகும் என்பதை டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். இந்த விவகாரத்தில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யும் ட்ரம்பின் கோரிக்கையை இந்தியா மறுத்துவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவுமில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஜூலை 22ஆம் தேதி, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா சமரசம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். அதை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரம் இரு தரப்பு பிரச்சினை என்றும், இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon