மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

சுதந்திர தினத்தில் அபிநந்தனுக்கு விருது!

சுதந்திர தினத்தில் அபிநந்தனுக்கு விருது!

டெல்லியில் நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறும் சுதந்திர தின விழாவில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது.

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம், விமானப் படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். சுமார் 60 மணி நேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது.

பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய விமானங்களைத் துரத்தி வந்த பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் தனது மிக் பைசன் ரக விமானத்தைக் கொண்டு சுட்டு வீழ்த்தியதோடு, பாகிஸ்தான் வசம் சிக்கியபோது இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்கள் குறித்தும் வாய்திறவாமல் இருந்து நாடு திரும்பினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த அபிநந்தனின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்த தகவல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகியிருந்த நிலையில், அவருக்கான விருதை மத்திய அரசு இன்று உறுதிசெய்துள்ளது. டெல்லியில் நாளை நடக்கும் 73ஆவது சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கிறது மத்திய அரசு. சென்னையைச் சேர்ந்த அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது கிடைப்பது தமிழத்துக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

நாளைய தினத்தில் பாலகோட் தாக்குதலைத் தலைமை தாங்கி நடத்திய இந்திய விமானப் படைக் குழு தலைவர் மின்டி அகர்வாலுக்கு யுத் சேவா பதக்கமும் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon