மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 7 டிச 2019

டாப் ஹீரோக்கள் படத்தில் மீரா மிதுன்

டாப் ஹீரோக்கள் படத்தில் மீரா மிதுன்

‘பிக் பாஸ்’ மீரா மிதுன், சிவகார்த்திகேயன், அருண் விஜய்யின் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீரா மிதுன். அதைத் தொடர்ந்து போதை ஏறி புத்திமாறி படத்தில் நடித்த இவர், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழகமெங்கும் அறியப்படும் முகமானார். இந்நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன் இவர் வெளியேற்றப்பட்டாலும், அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அருண் விஜய்-விஜய் ஆண்டனி நடித்து வருகின்றனர். ஷாலினி பாண்டே இப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தற்போது மீரா மிதுன் இப்படத்தில் இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் இணைந்துள்ளார் மீரா மிதுன். இத்தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இவர்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படமிது. சிவகார்த்திகேயனுடன் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு, டி. இமான் இசை, ரூபன் படத்தொகுப்பு. செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகவிருக்கிறது.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon