மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிகளுக்கு வீரதீர விருது!

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிகளுக்கு வீரதீர விருது!

நெல்லையில் கொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதிகளுக்கு வீரதீர விருது வழங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருக்கிறார்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் தனது மனைவி செந்தாமரையுடன் தோப்பிற்குள் இருக்கும் தங்கள் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு சண்முகவேல் தனது வீட்டின் வெளியில் அமர்ந்திருந்தபோது முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் பின்பக்கமாக வந்து அவரது கழுத்தைத் துணியால் நெரித்துள்ளார். சண்முகத்தின் அலறல் சத்தம் கேட்டு மனைவி செந்தாமரை ஓடி வந்துள்ளார். சற்றும் யோசிக்காமல் கையில் கிடைத்த செருப்பு, சேர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கொள்ளையடிக்க வந்தவர்களை ஓட ஓட விரட்டினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இருவரது வீரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார். தேசிய ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியானது. இவர்களது செயலுக்குப் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ”துணிச்சல் மிக்க செயல்” என்று பாராட்டினார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், “திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பார்த்தா அல்லு விடும். என்ன வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி, பகைக்கு முன்னாடி புலின்னு சொல்ற மாதிரி மெர்சல் காட்டிட்டாங்க. இது தமிழனின் நேர்கொண்ட பார்வை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொள்ளையர்களை விரட்டியடித்த சண்முகவேல் செந்தாமரை தம்பதிக்கு வீரதீர விருது வழங்க தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பரிந்துரை செய்திருக்கிறார். இருவருக்கும் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் விருது வழங்கவுள்ளார்.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon