மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

அத்திவரதர் முன்பு பிறந்த குழந்தை!

அத்திவரதர் முன்பு பிறந்த  குழந்தை!

அத்திவரதர் தரிசனம் முடித்துவிட்டு கோயிலிலிருந்து வெளியே வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது நடைபெற்று வருகிறது. வைபவத்தின் 45ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 14) அத்திவரதர் ரோஸ் நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மாலை அணிந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார். இதற்கிடையே அத்திவரதர் தரிசனத்தின் போது கூட்ட நெரிசலால் ஏற்படும் மோதல்களும், புகார்களும் ஏராளம். விவிஐபி வரிசையில் மோதல், தரிசனத்துக்கான பாஸ் வழங்குவதில் முறைகேடு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு, ஆய்வாளரை ஒருமையில் பேசிய ஆட்சியர், பக்தர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை என அங்கு அலைமோதும் கூட்டம் போலவே நாளுக்கு நாள் புகார்களும் அதிகரித்தன. இன்னும் இரண்டு தினங்களே தரிசனம் நடைபெற உள்ள நிலையில் காஞ்சியில் கூட்டம் அலைகடல் போல் காட்சி அளிக்கிறது. தரிசன நாட்களை மேலும் 28 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆகமவிதிப்படி அத்தி வரதர் வைபவம் 48 நாட்கள் மட்டுமே நடைபெறும். கடந்த காலங்களிலும் அவ்வாறே நடைபெற்றது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 14) கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்துத் திரும்பிய கர்ப்பிணி விஜயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கான சிறப்பு வரிசையில் நின்று சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக கோயில் அருகே உள்ள மருத்துவ முகாமிற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் கௌதம், செவிலியர் யோகவள்ளி உதவியுடன் அப்பெண்ணுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளது. அவருக்கு மூன்று கிலோ எடையுடன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon