மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

பிகில் மோதிரம்: எம்.ஜி.ஆர் வழியில் விஜய்

பிகில் மோதிரம்: எம்.ஜி.ஆர் வழியில் விஜய்

பிகில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பிகில் என முத்திரையிட்ட தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளார் விஜய்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் பிகில் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கிறார். இளம் வயது விஜய் கால் பந்து பயிற்சியாளராகவும், வயதான விஜய் அவருக்கு தந்தையாகவும் வருவார் எனத் தெரிகிறது. மெர்சல் படத்தில் அப்பா விஜய் பிளாஷ்பேக்கில் தோன்றினார். அதனால், இப்படத்தில் இரண்டு விஜய்யும் ஒரே சமயத்தில் திரையில் வருவார்களா, இல்லை பிளாஷ்பேக்கில் ஒரு விஜய், சமகாலத்தில் ஒரு விஜய் என தோன்றுவார்களா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நயன்தாரா மருத்துவக் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கால்பந்தாட்ட வீராங்கனைகளாக ரெபா மோனிகா ஜான், இந்துஜா, ரோபோ ஷங்கரின் மகள் உள்ளிட்ட 11 பெண்கள் கொண்ட அணியும், யோகிபாபு, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்றுடன்(ஆக.13) விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்துள்ளது. இதனால், படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய். நடிகர், நடிகைகளில் இருந்து தொழில் நுட்ப கலைஞர்கள் வரை பிகில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மோதிரத்தை பரிசளித்துள்ளார் விஜய். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ‘பிகில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. 95% படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. படம் குறித்த அப்டேட்டுகளை அறிவிக்காததற்கு மன்னியுங்கள். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘பிகில் படத்தில் தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தளபதி விஜய். அவருடைய மனது தங்கம் போன்றது. தளபதி தான் பெஸ்ட்’ என்றும் கூறியுள்ளார்.

மெர்சல் படத்தின் படப்பிடிப்பின் இறுதியிலும் விஜய், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், எம்.ஜி.ஆர் இவ்வாறான ஆச்சர்யப் பரிசுகளை தனது படக்குழுவினருக்கு அளித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவார். தற்போது, விஜய்யும் அதே பாணியில் பரிசுகளை வழங்கி வருகிறார்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon