மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

முடங்கிக் கிடக்கும் பில்டர்ஸ்!

முடங்கிக் கிடக்கும் பில்டர்ஸ்!

நாடு முழுவதும் சுமார் 1.74 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் முடங்கிக் கிடப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சென்னையில் இவ்வகை வீடுகளுக்கான எண்ணிக்கை குறைந்துள்ளது.

சொத்து ஆலோசனை நிறுவனமான அனராக் பிராபர்ட்டி சார்பாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடு கட்டும் திட்டங்களுக்கான செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 220 திட்டங்களின் கீழ் 1.74 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் முடங்கியுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1.77 லட்சம் கோடியாகும். இத்திட்டங்கள் அனைத்தும் 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்டவையாகும். முடங்கிக் கிடக்கும் வீடுகளில் சுமார் 66 சதவிகித வீடுகள், அதாவது 1.15 லட்சம் வீடுகள் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டுவிட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1.11 லட்சம் கோடியாகும்.

’தாமதமான மற்றும் மிகவும் தாமதமான’ வீடமைப்புத் திட்டங்களில் ரூ.4.64 லட்சம் கோடி மதிப்பிலான 5.76 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்படாமல் உள்ளன. இந்திய நகரங்களிலேயே சென்னையில்தான் முடங்கிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளன. 100 திட்டங்கள் மட்டுமே சென்னையில் முடங்கியுள்ளன. ரியல் எஸ்டேட் துறை சென்னையில் மேம்பட்டு வருவதால்தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அனராக் பிராபர்டி நிறுவனத்தின் தலைவரான அனுஜ் புரி, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். எனினும் தாமதமாகக் கட்டப்பட்டு வரும் வீடுகளின் எண்ணிக்கை சென்னையில் அதிகமாகவே (10,000 வீடுகள்) உள்ளது.

டெல்லி தேசிய தலைநகர் பகுதி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் சென்னையைத் தொடர்ந்து ஹைதாராபத்தில் மட்டுமே தாமதமாகச் செயல்படும் வீடமைப்புத் திட்டங்கள் அதிகமாக உள்ளன. ஹைதராபாத்தில் மொத்தம் 4,150 திட்டங்கள் முடங்கியுள்ளன. டெல்லியில் அதிகபட்சமாக 1.2 லட்சம் வீடமைப்புத் திட்டங்கள் முடங்கியுள்ளன. மும்பையில் 38,060 வீடுகளும், புனேவில் 9,650 வீடுகளும் கட்டிமுடிக்கப்படாமல் முடங்கியுள்ளன. பண நெருக்கடி மற்றும் வழக்குகள் காரணமாகவே பெரும்பாலான கட்டுமானத் திட்டங்கள் முடங்கியுள்ளன. வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பண நெருக்கடியால்தான் வீடமைப்புத் திட்டங்கள் முடங்குவதாக அனுஜ் புரி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon