மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

விஞ்ஞானிகளுக்காக குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்

விஞ்ஞானிகளுக்காக குரல் கொடுக்கும் ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டிரெய்லரை தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு அதர்வா, ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளியான படம் ஈட்டி. ஓட்டப் பந்தயத்தை மையமாகக் கொண்ட இப்படம் பரவலான கவனத்தைப் பெற்றது. இப்படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்ததாக ஜி.வி. பிரகாஷை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் ஐங்கரன். இப்படத்தில் மஹிமா நம்பியார் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொதுவாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு அவரே இசையமைப்பது வழக்கம். அதே போல இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். ரவி அரசின் முதல் படமான ஈட்டி படத்திலும் இவரே இசையமைத்திருந்தார்.

காமன் மேன் ப்ரெசென்ட்ஸ் நிறுவனம் சார்பில் கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக தகவல்களின்றி இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை தனுஷ் இன்று வெளியிட்டுள்ளார்.

கண்டுபிடிக்கவே முடியாத ஒரு குற்றச் செயலை விசாரிக்கும் காவல் துறையின் காட்சிகளுடன் டிரெய்லர் தொடங்குகிறது. ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இதன் டிரெய்லரில் ‘இங்க ஆகாயத்துக்கு ராக்கெட் விடறதுக்கும் விஞ்ஞானி இருக்கான், ஆழ் கடல ஆராய்ச்சி பண்றதுக்கும் விஞ்ஞானி இருக்கான். ஆனா, அத அங்கீகரிக்கற அறிவு தான் நம்ம கிட்ட இல்ல’ என ஜி.வி. பேசுவதன் மூலம் கதையின் கருவை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. அரசியல், சமூகம், விஞ்ஞானம், கிரைம் என பரபரப்பான பேசு பொருள்களுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக ஐங்கரன் டிரெய்லர் உருவாகியுள்ளது.

ஐங்கரன் டிரெய்லர்


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon