மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

மாநாடு இல்லை மகா மாநாடு: சிம்பு

மாநாடு இல்லை மகா மாநாடு: சிம்பு

சிம்பு நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மாநாடு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் அவர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மகா மாநாடு என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

சிம்பு ஒரு வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகி நடித்து வருகிறார் என அவரது ரசிகர்கள் ‘சிம்பு 35’ என்று சமூகவலைதளங்களிலும், போஸ்டர் ஒட்டியும் கொண்டாடிவந்த நிலையில்தான் மாநாடு படத்தில் அவர் நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது.

சிம்பு மீது வழக்கமாக வைக்கப்படும் குற்றச்சாட்டு படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, குறித்த நேரத்தில் படத்தை முடித்துக்கொடுக்க மறுப்பதுமே. இதே குற்றச்சாட்டைத் தான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் கூறினர். படப்பிடிப்பு தொடங்க தாமதமானதற்கு காரணம் சிம்பு என தெரிவித்தனர். இதனால் சிம்புவை விட்டு வேறொரு நடிகரைக் கதாநாயகனாகக் கொண்டு மாநாடு திரைப்படம் தயாராகும் என கூறப்பட்டது.

இதுபற்றி சிம்பு தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகாத நிலையில் தற்போது தனது புதிய பட அறிவிப்பு மூலம் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் ‘மகா மாநாடு’ என்ற டைட்டிலில் புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை டி.ராஜேந்திரன் தயாரிக்கவுள்ளார்.

“எனது முப்பத்தைந்து ஆண்டு கால சினிமா அனுபவத்தை இந்தப் படத்தில் முதலீடு செய்கிறேன். தரமான பட உருவாக்கத்துடன் பிரம்மாண்டமாக இப்படம் தயாராகவுள்ளது. படத்தின் ஜானரை இப்போது சொல்வதைவிட பின்னால் கூறுவது சரியாக இருக்கும். முழு பொழுதுபோக்குடன் நல்ல கருத்துக்களையும் தாங்கி இதன் திரைக்கதை அமைகிறது. சிம்பு தற்போது வெளிநாட்டில் உள்ளார். திரைக்கதை பணிகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் படம் பற்றிய முக்கிய தகவல்களை அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் சிம்புவுக்கு பதிலாக மற்றொரு நடிகரை இணைக்கும் பணியிலும் படப்பிடிப்புக்கான திட்டமிடலிலும் உள்ளனர்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon