மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

அமைச்சரைக் காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை !

அமைச்சரைக் காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை !

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.

தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 வரை, தனது பதவியைப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது.

கடந்த ஜூலை 25ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது 6ஆவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 1996ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்துத் துணைத் தலைவராக இருந்தது முதல் தற்போது வரையிலான அவரது சொத்துகள் மற்றும் வருமானம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.

இம்மனு இன்று (ஆகஸ்ட் 14) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும், பொதுத் துறை சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொதுத் துறைச் செயலருக்கு உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon