மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

ரஜினி வீட்டுக்கு மகாபாரதம் : காங்கிரஸ் திட்டம்!

ரஜினி வீட்டுக்கு மகாபாரதம் : காங்கிரஸ் திட்டம்!

காஷ்மீர் விவகாரம் அரசியலின் பல்வேறு திசைகளையும் ஆக்கிரமித்திருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அவ்விழாவில் எதிர்பாராத விதமாக மரபுகளைக் கடந்து மேடையேறிய ரஜினி, “விஷன் காஷ்மீர் ஆப்ரேஷனுக்காக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பான உங்களுடைய நாடாளுமன்ற உரை மிகவும் சிறப்பாக இருந்தது. யார் இந்த அமித் ஷா என்று மக்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணரையும் அர்ஜுனரையும் போன்றவர்கள். அதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனர் என்று யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு மட்டுமே அது தெரியும்” என்று கூறினார்.

இது தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. ‘ரஜினி மகாபாரதத்தை சரியாக படிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் ரஜினியின் கிருஷ்ணர்- அர்ஜுனர் கருத்துக்கு எதிர் வினையாக தமிழக காங்கிரஸ் சார்பில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சில காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவன் சென்றுள்ளனர். “மகாபாரதம் புத்தகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று ரஜினி வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்துக் கொடுப்போம். அவர் நம்மை சந்திக்க விரும்பவில்லையென்றால், ரஜினி வீட்டு செக்யூரிட்டியிடமாவது கொடுத்து விட்டு வருவோம். இதன் மூலம் ரஜினியை அம்பலப்படுத்தியது போலவும் இருக்கும். தமிழக காங்கிரசுக்கும் டெல்லி வரை பெயர் கிடைக்கும்’ என்று இந்தப் போராட்டத் திட்டத்தை யோசனையாக கூறியிருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அப்போது சத்தியமூர்த்தி பவனில் இல்லாத நிலையில் அவரிடம் இதைச் சொல்வதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon