மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

இது முதலைகள் நடமாடும் பகுதி: அப்டேட் குமாரு

இது முதலைகள் நடமாடும் பகுதி: அப்டேட் குமாரு

டிவிட்டர், பேஸ்புக் பக்கம் போனா ஆளாளுக்கு ஒரு முதலை கதை சொல்றாங்க. அடேயப்பா நம்மாளுங்களுக்குள்ள இவ்வளவு கதை இருக்கான்னு வியந்துட்டேன். சும்மாவா மோடியை பிரதமரா வச்சுகிட்டு இப்படி கூட கதை எழுதாட்டா எப்படின்னு ஒரு தம்பி சொல்றான்.

நான் ஒரு பாஜககாரர்ட்ட ஏன் உங்க ஆளு இப்படி ஒரு கதையை சொல்லி வாங்கி கட்டிகிடுறாருன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு, நேத்து வரைக்கும் காஷ்மீர்டா, உரிமைடான்னு இங்க கையைத் தூக்கிகிட்டு இருந்தவங்க எல்லாம் இன்னைக்கு முதலை படத்தை தூக்கிட்டு திரியுறாங்க. இதுக்கு பேர் தான் ராச தந்திரம். எங்க ஆளை இன்னும் 10 வருசத்துக்கு அடிச்சுக்கவே முடியாதுன்னுட்டு போயிட்டாரு.. இப்ப என்னோட முதலை கதையை போடவா வேணாமான்னே தெரியலை. சரி நீங்க அப்டேட்டை பாருங்க.

கோழியின் கிறுக்கல்

மனைவி கூறும் அனைத்து நிகழ்விற்கும் சூப்பர் டீலக்ஸ் ராமசாமி போல 'நானும் சாட்சி' என்று நிற்பதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை!!!

Hasan Kalifa

நீங்க குளத்தில இறங்குனதும் உடனே குட்டி முதலையே தூக்கிட்டிங்க,

உடனே இல்லேங்க கொஞ்ச நேரம் தாய் முதலையிடம் பேசிக்கிட்டு இருந்தேன்,அப்புறம்தான் குட்டி முதலையே தூக்கினேங்க..

ரஹீம் கஸ்ஸாலி

அண்ணனின் ஆமைக்கதைகளுக்கு ஓய்வு கொடுப்போம். அய்யாவின் முதலைக்கதை வந்துவிட்டது.

ஜோக்கர்

ஜி ~ அடேய் உங்க ஊருலதான் இதுக்கு பேரு முதலை, எங்க ஊருல இது பேரு பல்லி, சின்னப்புள்ளையில இதை பிடிச்சு என் சேக்காளி டவுசர்க்குள்ள போட்டு விளையாடுவோம்.

ஆனா இதுக்குபோயி இவங்கலாம் பயந்துகிட்டு...

ஜால்ரா காக்கா

காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினிகாந்த்

செய்தி

நல்ல வேளை இவனுக பழக்க தோஷத்துல ரஜினியை தரிசித்த அத்திவரதர்ன்னு செய்தி போடாம விட்டானுகல

உள்ளூராட்டக்காரன்

நண்பனை சாயங்காலம் சந்திச்சப்ப, கடன் ஜாஸ்தி ஆகிடுச்சு... வாழவே பிடிக்கலேன்னு புலம்புனான்

இப்போ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி, வாட்சப்ல சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா ஸ்டேட்டஸ் வச்சிருக்கான்

இவனுங்கள புரிஞ்சிக்கவே முடியல

ரஹீம் கஸ்ஸாலி

இன்னமும் மண் மணம் மாறாமல் வட்டார வழக்கில் பேசுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம்தான் அப்படி பேசுபவர்களை கிராமத்தான் என்ற ஒற்றை வார்த்தையில் ஒதுக்கிவிட்டு யதார்த்தத்தை தொலைத்துவிட்டு நவநாகரீக வார்த்தைகளை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறோம்.

முகிலன்

தனியார் பஸ்ஸில் பயணம் செய்ய காசு கொடுத்தோம் என்பதை விட பாட்டு கேட்க காசு பணம் கொடுத்தோம்னு தான் சொல்லனும்.!

சோழ நாட்டு விவசாயி

மேனஜர் : ஒரு நாளைக்கு எத்தன தடவ டா டீ குடிப்ப.

மீ : தலைவலி வரும் போது லாம்.

மேனஜர் : தலைவலி எப்போ வரும்.

மீ : டீ குடிக்கிறது க்கு முன்னாடி.

மேனஜர் : நான் வரும் போது வந்துட்டான் தலைவலி ன்னு சொன்ன மாதிரி இருந்துச்சி.

மீ : அதான் தெரியுதுல்ல.

ச ப் பா ணி

கண்ணால் பேசுவதும் பொய்

கனிவுடன் சொல்வதும் பொய்

கடுப்பில் கணவனை திட்டும் சொல்லே மெய்

மனைவியின் ஒப்புதல் வாக்கும

@ItsJokker

சிம்பு ~ ஏன்டா அடிச்சா கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சியா??

TR ~ அதுக்கு ஏன்டா, என் சட்டையை கிழிச்சே??!!

மகாமாநாடு

நட்சத்திரா

"நான் பாத்ததுலயே வொர்ஸ்ட் செட் இதுதான்"

என்று டீச்சர் சொல்லும் போது வரும் பெருமைக்கு நிகரானது தான்

"என்னைத் தவிர உங்ககூட வேற எவளாலும் குப்பை கொட்ட முடியாது

சாத்தூர்காரன்

சின்ன மோடி: நான் ஆமைகறி தின்றேன்..ஆமை ஓட்டிலே பயணம் செய்தேன்.

பெரிய சீமான்: நான் முதலை குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தேன்..

செந்திலின்_கிறுக்கல்கள்😀

சாமானியனின் வீட்டில் நடக்கும் கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு மனைவியின் சமையலே தண்டனையாகவும் , சமாதானபுறாவாகவும் செயல்படுகிறது!

-லாக் ஆஃப்


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon