மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

கவுரவிக்கப்படும் காவலர்கள்!

கவுரவிக்கப்படும் காவலர்கள்!

தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 16 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படவுள்ளது.

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தன்னலம் இன்றி சிறப்பாக பணியாற்றிய 16 காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சரின் காவல் பதக்கத்தை வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

அதன்படி, ரயில்வே காவல் டிஜிபி செ.சைலேந்திரபாபு , சென்னை காவல் நிர்வாக பிரிவு ஏடிஜிபி ப.கந்தசுவாமி, சென்னை பெருநகர சட்ட ஒழுங்கு வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன், சேலம் கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் ஜா. நாகராஜன், தஞ்சாவூர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சி.செந்தில்குமார், சென்னை ஜி-4 மனநிலை காப்பக காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் சா.டெய்சி, ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

இதேபோல, புலன் விசாரணை பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. அதன்படி, மதுரை மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வனிதா, சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளர் புருஷோத்தமன், சேலம் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணன், மன்னார்குடி உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், பல்லாவரம் காவல் ஆய்வாளர் கிரிஸ்டின் ஜெயசிங், வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் காசிவிஸ்வநாதன், திருச்சி திலகர் நகர் காவல் ஆய்வாளர் ஞானசேகர், கோயம்புத்தூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி, ஒரகடம் காவல் ஆய்வாளர் நடராஜன், திருநெல்வேலி ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் தேவி, ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படவிருக்கிறது.

இதேபோல் நாடு முழுவதும் வீர தீர செயல்களைப் புரிந்த 677 காவல் துறை அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது டெல்லியில் வழங்கப்படவுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 பேருக்குக் குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை எஸ்.பி ஜெயச்சந்திரன், கியூ பிரிவு டிஎஸ்பி யாகோப், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன், திண்டிவனம் டிஎஸ்பி திருமால், கிருஷ்ணகிரி ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கிருஷ்ண ராஜன், சென்னை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி லவாகுமார், உதகை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஆவடி சிறப்பு போலீஸ் உதவி படைத் தலைவர் கோவிந்தராஜு, சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு ஆய்வாளர் அருள்மணி, புதுக்கோட்டை டவுன் காவல் ஆய்வாளர் பரவாசுதேவன் உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon