மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

75 நாள் ஆட்சி: மோடி பெருமிதம்!

75 நாள் ஆட்சி: மோடி பெருமிதம்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக கடந்த மே 30 ஆம் தேதி பிரதமர் பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.

அவர் பிரதமராக பொறுப்பேற்று இன்றோடு 75 நாட்கள் ஆகின்றன. இதை ஒட்டி IANS செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார் மோடி. அந்த செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் சந்தீப் பம்சாய்க்கு அளித்துள்ள பேட்டியில் 75 நாள் ஆட்சி பற்றி பெருமிதப்பட்டுள்ளார் மோடி.

“இந்தியாவில் வரலாறு காணாத சாதனைகளை இந்த 75 நாட்களில் நாங்கள் செய்திருக்கிறோம். நல்ல நோக்கங்கள், தெளிவான கொள்கைகள் என்ற தாரக மந்திரத்தை ஏந்தி இந்த 75 நாட்களில் நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். குழந்தைகள் நலனில் இருந்து சந்திராயன் -2 வரை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கான பாதுகாப்பு வரை, காஷ்மீர் முதல் விவசாயிகள் வரை என மக்களின் ஆதரவோடு மகத்தான மாற்றங்களை நாங்கள் இந்த 75 நாட்களில் கொண்டு வந்திருக்கிறோம். ஜல்சக்தி அமைச்கம் முக்கியமான சாதனையாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களால் கட்டியெழுப்ப முடிந்த வலுவான தளத்தின் விளைவாகத்தான், முதல் 75 நாட்களில் எங்களால் சாதிக்க முடிந்தது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 17 ஆவது நாடாளுமன்றத் தொடர் செயலாக்கம் நிறைந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடராம அமைந்தது. நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon