மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

‘சங்கத்தலைவன்’ ஆன சமுத்திரக்கனி

‘சங்கத்தலைவன்’ ஆன சமுத்திரக்கனி

வெற்றி மாறனின் தயாரிப்பில் மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் படத்திற்கு சங்கத்தலைவன் என பெயரிடப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி, கே கே மேனன், கிஷோர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் உதயம் என்.எச் 4. வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மணிமாறன் இப்படத்தை இயக்கினார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதிய வெற்றி மாறன், தயாநிதி அழகிரியுடன் இணைந்து படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை பயணத்தால் ரசிகர்களிடம் கவனம் பெற்றது என்.எச் 4.

இந்நிலையில், ஆறு வருடங்களுக்குப் பின் சங்கத்தலைவன் படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக வரவிருக்கிறார் மணிமாறன். சமுத்திரக்கனி இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். கருணாஸ் முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

படத்தின் போஸ்டரும், போஸ்டரில் அதிகம் காணப்படும் சிவப்பு நிறமும், போஸ்டரில் சமுத்திரக்கனியின் பின்னணியில் இருக்கும் கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரது கொடியையும் பார்க்கும் போது, மார்க்சிய-லெனினிஸம் சார்ந்த கருத்துக்கள் கொண்ட படமாக சங்கத்தலைவன் இருக்கும் எனத் தெரிகிறது.

உதய் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உதயகுமார் - கீதா உதயகுமார் தயாரிக்கின்றனர். கிராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் வெளியிடுகிறார். படத்தில் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளிவரவிருக்கிறது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon