மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 24 ஜன 2021

இறுதிகட்டப் போராட்டத்தில் கோமாளி!

இறுதிகட்டப் போராட்டத்தில் கோமாளி!வெற்றிநடை போடும் தமிழகம்

இராமானுஜம்

கோமாளி திரைப்படம் சம்பந்தமாக திருச்சி ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் ஒரு சிலர் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருச்சி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சார்ந்த மீனாட்சி சுந்தரம், ராதா, சோனா மீனா திரையரங்கு உரிமையாளர்கள் சிதம்பரம், திருச்சி பிரான்சிஸ் மற்றும் திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கச் செயலாளர் ரவி ஆகியோர் பகிரங்கமாக சம்பந்தமே இல்லாத எந்தவிதமான பாக்கியும் இல்லாத கோமாளி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களிடம் வழிப்பறி செய்யும் செயலைபோல யாரோ கொடுக்க வேண்டிய ரீபண்ட் தொகையைக் கட்டினால்தான் கோமாளி திரைப்படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டி படத்தை வெளியிடாமல் ரெட் கார்ட் போட்டுள்ளர்கள்.

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தைத் தயாரித்தவர் ஞானவேல் ராஜா. அந்தத் திரைப்படத்தை ஈரோட்டைச் சார்ந்த தன்வீ பிலிம்ஸுக்குத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை அவுட் ரைட் முறையில் விற்பனை செய்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்தை அவரிடமிருந்து திருச்சி ஏரியாவுக்கு எம்.ஜி முறையில் திருச்சி ஏரியா உரிமையை ஜி.தியாகராஜன் என்னும் விநியோகஸ்தர் வாங்கி வெளியிட்டார்.

அவ்வாறு வாங்கும்போது அவர் செலுத்த வேண்டிய தொகையில் ரூ.13 லட்சம் மீதம் வைத்துள்ளார். மேற்படி திரைப்படம் எதிர்பார்த்த அளவில் திரையரங்குகளில் ஓடாததால் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜி.டி அவர்கள் திருச்சி ஏரியாவில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்துக்காக திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து டெபாசிட் வாங்கியிருந்தார். அதில் திரையரங்கு உரிமையாளர்களுக்குத் தரவேண்டிய ரீபண்ட் தொகையை ஜி.டி அவர்களிடமிருந்துதான் வசூல் செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஜி.டி இதுநாள் வரை தொடர்ந்து திரைப்படம் வெளியிட்டுகொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில்கூட அவர் லயன் கிங், ஏ1 மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்படியிருக்கும்பட்சத்தில் அவரிடம் பணத்தை வாங்குவதற்கு முயற்சி செய்யாமல் சம்பந்தமே இல்லாமல் கோமாளி திரைப்படத்தை முடக்குவது எந்தவிதத்தில் நியாயம்?

மேலும், மீனாட்சி சுந்தரம், ரவி மற்றும் ராதா ஆகியோர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்துக்குச் சென்று பணத்தை வாங்கும் வரை எந்தத் திரைப்படத்தையும் வெளியிட மாட்டோம் என்று பகிரங்கமாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் மிரட்டுகிறார்கள்.

ஆகவே, நேற்று (ஆகஸ்ட் 13) அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒன்றுகூடி மேற்படி விஷயத்துக்குக் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, வருகிற ஆகஸ்ட் 15 அன்று கோமாளி திரைப்படம் ஞானவேல்ராஜா மற்றும் சக்தி வேலன் ஆகியோர் பிரச்சினைகள் ஆகஸ்ட் 14 அன்று மாலைக்குள் சுமுகமாகத் தீர்வு காணபட வேண்டும்.

அவ்வாறு நடக்காதபட்சத்தில் இனிவரும் காலங்களில் எந்த ஒரு திரைப்படத்தையும் திருச்சி ஏரியாவில் வெளியிடுவதில்லை என்று ஒட்டுமொத்தமாக சுய கட்டுப்பாடுடன் முடிவெடுத்து தீர்மானமாக நிறைவேற்றி உள்ளார்கள்.

மேலும் மேற்படி விஷயத்தை புகாராக தயார் செய்து தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவெடுத்துள்ளார்கள். எனவே, இன்று மாலைக்குள் மேற்படி விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க


டிவி கொடுக்கும் ஜியோ!


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon