மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

கிச்சன் கீர்த்தனா: மிளகு ரொட்டி

கிச்சன் கீர்த்தனா: மிளகு ரொட்டி

மின்னம்பலம்

மழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், காலை உணவை உண்ணும்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருப்பது நல்லது. மழைக்காலங்களில் நாம் உண்ணும் உணவுகளில் மிளகுத்தூளைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று, எண்ணெய் இல்லாமல் செய்யப்படும் இந்த மிளகு ரொட்டி.

என்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

சிறப்பு

இந்த மிளகு ரொட்டியை இரவு நேர உணவாக உட்கொள்ளும்போது எளிதில் ஜீரணமாகும். வெளியூருக்குப் பயணம் செய்யும்போது, மிளகு ரொட்டியின் நடுவில் சிறிதளவு ஊறுகாயைத் தடவி ரோல் போன்று செய்து ‘பேக்’ செய்து கொள்ளலாம்.

நேற்றைய ரெசிப்பி: பெப்பர் சிக்கன்


மேலும் படிக்க


முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்


பிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன?


ஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி!


கோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க?


பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!


திங்கள், 19 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon