மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - சிவப்பு அரிசி காரக் கொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: விநாயகர் ஸ்பெஷல் - சிவப்பு அரிசி காரக் கொழுக்கட்டை

விநாயகருக்குப் படைக்கும் பலகாரங்களில் முக்கியமானது கொழுக்கட்டை. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் விரும்பி உண்ணப்படும் உணவாகத் திகழ்கிறது கொழுக்கட்டை. இலங்கை கொழுக்கட்டையில் பயறுக்கு முக்கியத்துவம் உண்டு. அரிசி மாவில் மட்டுமல்ல... சிவப்பு அரிசியிலும் காரக் கொழுக்கட்டை செய்யப்படுவதுண்டு.

என்ன தேவை?

வறுத்த சிவப்பு அரிசி மாவு - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - அரை கப்

நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் கலக்கவும். மாவு கலவையுடன் வெதுவெதுப்பான நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு

சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் களைந்து நிழலில் நன்கு காயவைக்கவும். பிறகு மெஷினில் கொடுத்தோ அல்லது மிக்ஸியிலோ நைஸாக அரைத்து, வறுத்துச் சேகரிக்கவும். இந்த மாவில் தேவையானபோது புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்யலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமல்ல, அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

நேற்றைய ரெசிப்பி: பலாப்பழ மோதகம்


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!


பாஜகவுக்கு நேரம் சரியில்லையா? -ஜோதிடர்களின் அரசியல் கணிப்பு!


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


ஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா!


அன்றும் இன்றும்: ஜெனிவாவும்... ஸ்டாலினும்... நடப்பது என்ன?


புதன், 28 ஆக 2019

chevronLeft iconமுந்தையது