மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சீஸ் பராத்தா

கிச்சன் கீர்த்தனா: காலிஃப்ளவர் சீஸ் பராத்தா

உலகில் இன்று பலருக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. அதற்குப் பிரதான காரணம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே. காலிஃப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதுடன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்துக்குச் செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. பராத்தா என்றால் ஹோட்டல்களில்தான் செய்ய முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இந்த காலிஃப்ளவர் சீஸ் பராத்தாவை வீட்டிலேயே செய்து அனைவரையும் அசத்தலாம்.

என்ன தேவை?

காலிஃப்ளவர் - 250 கிராம் (வேக வைத்து மசிக்கவும்)

வெங்காயம் – ஒன்று

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

சீஸ் துருவல் - கால் கப்

வெண்ணெய் - 20 கிராம்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பராத்தா மாவுக்கு:

கோதுமை மாவு - 2 கப்

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

தண்ணீர், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் உப்பு, சர்க்கரை, நெய், தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வேகவைத்து மசித்த காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும். பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி சப்பாத்திக் குழவியால் லேசாகத் திரட்டி நடுவில் ஒரு ஸ்பூன் அளவு காலிஃப்ளவர் பூரணத்தை வைத்து, அதில் சிறிது சீஸ் துருவல் வைத்து, மீண்டும் உருட்டி பராத்தா போல் திரட்டவும். தவாவில் எண்ணெய்விட்டு பராத்தாவைச் சுட்டு எடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் சீஸ் பராத்தா தயார்.


மேலும் படிக்க


திமுக: ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரின் வாரிசுக்கே இந்த நிலையா?


வடிவேலு ஒரு தீர்க்கதரிசி: அப்டேட் குமாரு


பேக் அப்: அனு கொடுத்த அறிவிப்பு!


சந்திராயன் 2: லேண்டர் விக்ரமின் நிலை என்ன? - ஸ்ரீராம் சர்மா


சிதம்பரம் நிலை: ரஜினி கவலை!


திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது