மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு காலிஃப்ளவர் பிரட்டல்

கிச்சன் கீர்த்தனா: செட்டிநாடு காலிஃப்ளவர் பிரட்டல்

மதிய உணவின் ஆர்வத்தைத் தூண்டுவது அதன் துணை சேர்க்கையான சைடிஷ்களே. செட்டிநாட்டு உணவுகளில் சாதம் குறைவாக இருக்கும். சைடிஷ் ஆளை அசத்தும். அந்த வகையில் இந்த செட்டிநாடு காலிஃப்ளவர் பிரட்டல், வழக்கமாகச் சாப்பிடும் சாதத்தைவிட அதிகமாக சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.

என்ன தேவை?

காலிஃப்ளவர் - 500 கிராம்

வெங்காயம் – 2 (நறுக்கவும்)

தக்காளி – 2 (நறுக்கவும்)

இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

செட்டிநாடு மசாலா - ஒரு டீஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்)

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, செட்டிநாடு மசாலா, மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொதிக்கவிடவும். கலவை கொதித்து எண்ணெய் பிரியும்போது சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும். சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் பிரட்டல் தயார்.

நேற்றைய ரெசிப்பி: காலிஃப்ளவர் சீஸ் பராத்தா

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது