மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

‘காவேரி’ நகரத்தில் விழிப்புணர்வு மாரத்தான்!

‘காவேரி’ நகரத்தில் விழிப்புணர்வு மாரத்தான்!

திருச்சி மாரத்தான் 2019: முன் பதிவு செய்ய இன்றே கடைசி நாள்!

உலக இருதய தினத்தை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த காவேரி மருத்துவமனை நடத்தும் 5ஆம் ஆண்டு திருச்சி மாரத்தான் 2019 இதயத்திற்கான ஒரு மாரத்தான்.

வருடந்தோறும் 10,000-ற்கும் மேற்பட்டோர் பங்கு பெரும் திருச்சியின் ஒரே மிகப்பெரிய மாரத்தான் 29 செப்டம்பர் 2019 அன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது.

மாரத்தான் ஓட்டத்தின் வரலாறு

கிரீஸ் நாட்டில் உள்ள மாரத்தான் என்ற இடத்திலிருந்து தொடங்கியதால் இந்த ஓட்டத்திற்கு இப்பெயர் வந்தது. மாரத்தானின் தொடக்க வரலாறு சுவாரசியமானது. கி.மு.490ல் இது தொடங்கியது. பெர்சிய சக்ரவர்த்தி டேரியசின் படையெடுப்பைத் தோற்கடிக்க, ராணுவ உதவியை வேண்டி, 48 மணி நேரம் இடைவிடாது, ஏதென்ஸ் நகரிலிருந்து ஸ்பார்ட்டா நகருக்கு - மூச்சுப் பிடிக்க ஓரே ஓட்டமாக ஓடினான் - பிடிபிடிஸ் என்ற கிரேக்க வீரன். காடு, மலை, நதியெல்லாம் கடந்து ஓடினான் இவன்.

மாரத்தான் என்ற இடத்தில் பின்பு டேரியஸை எதிர்த்து சண்டையும் போட்டு, மீண்டும் ஏதென்சுக்கே ஓடினான் - வெற்றிச் செய்தியைக் கூற. இது 24 மைல் தூரம். ஓட்டமாக ஓடி, “மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!” என்று கூறி, மயங்கி விழுந்து, உயிர் துறந்தான். அவனது நினைவாகத்தான் மாரத்தான் ஓட்டம் நடைபெற ஆரம்பித்தது.

ரன் ஃபார் யுவர் ஹார்ட்

ரன் ஃபார் யுவர் ஹார்ட்(Run for Your Heart) என்ற பெயரில் நடக்கும் இந்த மாரத்தான் போட்டி, ஆண் - பெண் இருபாலருக்குமானது. 16லிருந்து 85வயதுக்கு உட்பட்டோர் பத்து கி.மீ ஓட்டப் பிரிவிலும், 1லிருந்து 85வயதுக்கு உட்பட்டோர் 5 கி.மீ ஓட்டப் பிரிவிலும் கலந்து கொள்ளலாம். ‘ஆரோக்கியமான இதயமே வலிமையான வாழ்வுக்கான அஸ்திவாரம்’ என்ற விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த திருச்சி மாரத்தான் நடைபெறவுள்ளது.

மொத்த பரிசுத்தொகை ₹2,50,000. வெற்றிபெறும் ஆண் பெண் இருபாலருக்கும் வயது பிரிவுகளுக்கு ஏற்ப (16 பிரிவுகள்) பரிசுகள் பிரித்து வழங்கப்படும்.

பங்குபெரும் அனைவருக்கும் டீ சர்ட், பதக்கம், காலை உணவு, சான்றிதழ், மாரத்தான் கையேடு மற்றும் மாரத்தான் பேக் வழங்கப்படும்.

முன்பதிவு செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 10

இணையதள முன்பதிவிற்கு திருச்சி மாரத்தான் 2019

நேரடி முன்பதிவிற்கு

1. காவேரி மருத்துவமனை, கண்டோன்மெண்ட், திருச்சி.

2. காவேரி மருத்துவமனை, தென்னூர், திருச்சி.

3.காவேரி ஹார்ட்சிட்டி, கண்டோன்மெண்ட், திருச்சி.

முன்பதிவு கட்டணம் ₹250.

மேலும் விபரங்களுக்கு: 80 80 200 200

(விளம்பரக் கட்டுரை)

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon