மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

நான் சேமித்தால் நமக்கு... நாம் சேமித்தால் நாட்டுக்கு!

 நான் சேமித்தால் நமக்கு... நாம் சேமித்தால் நாட்டுக்கு!

விளம்பரம்

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அவர்களின் கனவுத் திட்டமான மழைநீர் சேகரிப்பு என்பது பாரம்பரியமானது. நம் இந்தியத் திருநாட்டின் எல்லா மாநிலங்களிலும் பாரம்பரிய முறைப்படி பல்வேறு வகைகளில் மழை நீரை சேகரிக்க பல நூதன வடிவங்களை நுட்பமாக பயன்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். ஒவ்வொன்றாய் பார்ப்போமோ?

ஜால்ராஸ்

பாலைவனம் மிகுந்த ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் கிமு 1660 ஆம் ஆண்டுகளிலேயே பின்பற்றப்பட்ட மழைநீர் சேகரிப்பு முறை. இந்த முறைப்படி செவ்வக வடிவிலான கிணறு தோண்டப்பட்டிருக்கும். கிணற்றின் மூன்று அல்லது நான்கு பக்கவாட்டுப் பகுதிகளிலுமே படிகளாகவே கட்டப்பட்டிருக்கும். இதன் மூலம் மழை நீர் எளிதில் சேகரமாகும்.

டாங்கா

இன்று அமைச்சர் வேலுமணி வலியுறுத்துகிற தனி மனித மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின் முன்னோடி என்று இதை சொல்லலாம். நம் வீடுகளில் இருக்கும் கூரைகள் வழியே, முற்றங்கள் வழியே கீழே விழும் மழை நீரை உருளைவடிவ ஓடுபாதை வழியாக நிலத்துக்குள் செலுத்தும் முறை இது. ஒவ்வொரு குடும்பமும் இப்படி மழை நீரை சேகரித்தால், லாரிகளைத் தேடி ஓட வேண்டிய நிலைமை வராது. நாம் சேமித்த நீர் நமக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் கிடைக்கும். மழை நீர் சேமிப்பின் மகிமையே இதுதான்.

நான் சேமித்தால் நாம் பயன்படுத்தலாம். நாம் எல்லாரும் சேமித்தால் இந்த நாடே பயன்படுத்தலாம்! மழை நீரை சேகரிப்போம். தண்ணீர் வளமுள்ள தமிழகத்தை சுவீகரிப்போம்.

https://tnwaterwise.com

விளம்பர பகுதி

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon