மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 12 நவ 2019

ஸ்டாலின் சொன்னதை செய்வார்: ஜெயக்குமார்

ஸ்டாலின் சொன்னதை செய்வார்: ஜெயக்குமார்

முதல்வருக்கு எப்போது திமுக பாராட்டு விழா நடத்தப்போகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை கொண்டுவந்தால் பாராட்டு விழா எடுக்கத் தயாராக உள்ளதாக கூறினார். இந்த நிலையில் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை சென்னை வந்த முதல்வர், ‘8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர் தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்துள்ளார். இன்னும் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வர இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது பாராட்டு விழா நடத்தப்போகிறார். எங்களையெல்லாம் எப்போது அழைக்கப் போகிறார் என்று சொல்ல சொல்லுங்கள். அவர் சொன்னதை செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ள ஜெயக்குமார்,

சீக்கிரம் பாராட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தால் அது ஆரோக்கியமான அரசியலுக்கு உதாரணமாக இருக்கும். தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் நாகரீகமா என்று உலக அரங்கில் அனைவரும் வியந்து பார்ப்பார்கள்.இதன்மூலம் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் இமேஜும் உயரும் என்றும் கூறியுள்ளார்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon