மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 23 செப் 2019

என்னையும் குப்பை தொட்டில வீசிடுவாங்க - அமமுக ஐடி-விங் பற்றி வெற்றிவேல் பேட்டி !

என்னையும் குப்பை தொட்டில வீசிடுவாங்க - அமமுக ஐடி-விங் பற்றி வெற்றிவேல் பேட்டி !

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் நமது மின்னம்பலம் தினசரிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். சமீபகாலமாக அமமுக கட்சி சார்ந்து எழுந்து வந்த பல சந்தேகங்களுக்கும் தனது விளக்கம் மூலம் விடையளித்து அவர் முற்றுப்புள்ளி வைக்கிறார்.

‘அமமுகவின் அங்கீகரிக்கப்பட்ட பல பிரிவுகளுள் ஐடிவிங் பிரிவும் ஒன்று. தலைமையால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு அது செயல்பட்டு வருகிறது. மின்னம்பலத்திற்கு அளிக்கும் இந்த பேட்டியில் கூட அம்மாவை குறித்தோ, சின்னம்மா குறித்தோ அல்லது டிடிவி தினகரன் குறித்தோ ஏதேனும் ஒன்று நான் தவறுதலாகப் பேசிவிட்டால், அமமுக ஐடிவிங் யாரிடமும் சென்று எந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தானாக முன்வந்து எனக்கு எதிராக எழுத முழு அனுமதியும் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.

'தாயைப் பழித்தவனைத் தாய்த் தடுத்தாலும் விடேல்' என்னும் கூற்றுக்கிணங்க கட்சித் தலைமையே தடுத்தாலும் அவர்கள் பணிசெய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. அமமுகவை விமர்சிக்க அதுவரை எனக்கு பிரச்சினையும் ஏற்படவில்லை, நான் கட்சியை விமர்சிக்க ஆரம்பித்தால் என்னையும் தூக்கி குப்பையில் போடுவார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவருடன் அவரது குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். இது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டது. நானும் சென்று அம்மாவை சந்தித்து வரக் கூறினார்கள். ஆனால் ஒரு முறை கூட அம்மாவை நேரில் சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை.

அம்மா மருத்துவமனையில் இருந்த போது ஒரே ஒரு முறை மட்டுமே அனைவராலும் அவரைப் பார்க்க முடிந்தது. அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது காவிரி மேலாண்மைக்காக அனைத்து செயலாளர்களையும் அழைத்து ஒரு மீட்டிங் நடத்தினார்கள். அப்பொழுது தான் அவரைப் பார்க்க முடிந்தது. டிடிவி தினகரனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரைப் போனில் அழைத்தால் அவர் எடுக்கவில்லை என்றும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. அவர் சிக்னல் இல்லாத இடங்களில் செல்லும் போது நிச்சயமாக போனில் தொடர்பு கொள்ள இயலாதுதான்.

பதவியை எதிர்பார்த்து, பதவி கிடைக்காத விரக்தியில் பலரும் இவ்வாறு

பேசிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும் சரி, எந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தாலும் சரி கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும். தன்னை முதல்வராகிச் சென்ற சின்னம்மாவையே அந்த முதல்வர் சென்று சந்திக்கவில்லை. அண்ணாதிமுக தோல்வியைத் தழுவும் போது அமமுகவிடம் வருவார்கள். அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவோம் திமுகவையும், அதிமுகவையும் எதிர்த்து தான் போட்டியிடுவோம்.

அவர்களுடன் சேர்ந்து தேர்தல் தேர்தலைச் சந்திக்க எந்த வாய்ப்பும் கிடையாது. எங்கள் கொள்கைக்கு உட்பட்ட எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பும் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்வோம். துரோகிகளிடமிருந்தும், டெல்லிக்கு அடிமையாக மாறியுள்ள சில அடிமைகளிடமிருந்தும் அதிமுகவை மீட்பதே எங்கள் நோக்கம்’. என்று அமமுக சார்ந்து எழுந்த சந்தேகங்களுக்கும், கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்து அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியின் முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon