மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்கள்: ஸ்டாலின்

ஸ்டாலின் பெயரால் பல  சங்கடங்கள்: ஸ்டாலின்

ஸ்டாலின் பெயரால் பல சங்கடங்களை அனுபவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தில்லை கதிரவன் இல்லத் திருமண நிகழ்வு இன்று (செப்டம்பர் 12) சென்னை அண்ணா நகரிலுள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திருமணத்தை நடத்திவைத்து வாழ்த்துரை வழங்கினார்.

ஸ்டாலின் பேசும்போது, “இன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு சோதனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனிமேலாவது திமுகவினர் குடும்ப வாரிசுகளுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தவர்,

“அப்படியென்றால் உங்களது பெயர் தமிழ்ப் பெயரா என்று நீங்கள் கேட்கலாம். கலைஞருக்கு கம்யூனிச கொள்கைகள் மீது இருந்த ஈர்ப்பால் எனக்கு கம்யூனிஸ தலைவர் ஸ்டாலின் பெயர் வைக்கப்பட்டது. எனது மூத்த அண்ணன் மு.க.முத்துவுக்கு தனது தந்தை முத்துவேலரின் நினைவாக அந்த பெயரை கலைஞர் சூட்டினார். பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக எனது இரண்டாவது அண்ணனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். அதுபோல எனது தம்பிக்கு தமிழரசு, தங்கைகளுக்கு தமிழ்ச்செல்வி, கனிமொழி என தமிழ்ப் பெயர்களையே கலைஞர் சூட்டினார். பேரப்பிள்ளைகள் முதற்கொண்டு அனைவருக்கும் தமிழ்ப் பெயர்தான்.ஸ்டாலின் என்ற பெயர் வைத்ததால் நான் பல சங்கடங்களை அனுபவித்துள்ளேன். சென்னையிலுள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றபோது என்னுடைய ஸ்டாலின் என்னும் பெயரை மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் கலைஞரோ, பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார். அதுபோலவே ரஷ்யா சுற்றுப் பயணம் சென்றிருந்தபோதும் ஸ்டாலின் என்ற பெயரால் பல சங்கடங்களை அனுபவித்தேன்” என்றும் விளக்கினார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பேசிய ஸ்டாலின், “முதலீடுகளை கொண்டுவந்து அதன்மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் நானே முன்னின்று பாராட்டு விழா நடத்துகிறேன் எனக் கூறியுள்ளேன். ஆனால், ஸ்டாலின் எங்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டாம் என முதல்வர் கூறுகிறார். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். முதலீடுகள் வரவில்லை என அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 5 லட்சம் கோடி வரை முதலீடுகள் வந்துள்ளன என்றும் இதன்மூலம் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறினார்கள். இதன்மூலம் தமிழகத்துக்கு எத்தனை நிறுவனங்கள் வந்திருக்கின்றன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன? எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன? இதைத்தான் வெள்ளை அறிக்கையாக வெளியிடச் சொன்னோம். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை வெள்ளை அறிக்கை வெளியிடச் சொல்கிறார்” என்று கூறினார்.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

வியாழன் 12 செப் 2019