மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

அஞ்சலியின் நம்பமுடியாத கூட்டணி!

அஞ்சலியின் நம்பமுடியாத கூட்டணி!

யோகி பாபு, ராமருடன் இணைந்து அஞ்சலி நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 11) முதல் தொடங்கியது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் வெளிவந்த பேரன்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான லிசா போதிய வரவேற்பைப் பெறவில்லை. சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2, மாதவன் - அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி, அந்தப் படங்களின் ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காகத் தயாராகும் வெப் சீரிஸ் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.

இந்த நிலையில், அஞ்சலி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில், ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ தயாரிக்கும் ஃபேன்டஸி காமெடியான இந்தப் படத்தில் யோகி பாபு, ‘விஜய் டிவி’ ராமர் ஆகியோர் முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அஞ்சலியை ஒருதலையாகக் காதலிக்கும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர்கள் நடிக்கிறார்கள். முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகப் படக்குழு தெரிவிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஆர்வி ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்திற்கான பாடல்களை அருண்ராஜா காமராஜ் எழுதுகிறார்.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon