மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

முன்னோர்கள் மீது பெய்த மழை!

 முன்னோர்கள் மீது பெய்த மழை!

விளம்பரம்

ஒவ்வொரு மழைத்துளியின் அருமையையும் நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நம் இந்திய நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மழை பெய்யும் காலங்களில் அதை சேகரிக்கும் நற்பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள்.

மழை என்பது இயற்கை வாரிவழங்கும் கொடை. அதை முறைப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டியதில்தான் மனிதனின் அறிவும் அறமும் இருக்கிறது.

மழை நீர் சேகரிப்பு என்பது இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகைகளில் நடந்திருக்கிறது. அதற்காக நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்த உட்கட்டமைப்புகளை உற்று நோக்கினால் ஆச்சரிய மழை பொழிகிறது. இப்போது நாம் ஊரெல்லாம் காணும் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், கண்ணிகள் என்பதெல்லாம் முன்னோர்களின் நீர் மேலாண்மைக்கான சாட்சிகள்.

கடலும், ஆறும்தான் இயற்கை வழியில் தோன்றியவை. ஆற்றில் இருந்து வாய்க்கால்கள், வாய்க்கால்களில் இருந்து கண்ணிகள் என்பதெல்லாம் நம் முன்னோர்கள் இயற்கை வழங்கும் நீரை பயன்படுத்துவதற்காக உருவாக்கிய உட்கட்டமைப்புகள்.

பீகாரில் ஆகர் பைன்ஸ், கேரளாவில் பானம் கேணி, ஜம்மு காஷ்மீரில் சிங், நாகாலாந்தில் சாபோ, உத்தரப்பிரதேசத்தில் குண்ட் என்பதெல்லாம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட மழை நீர் சேகரிப்பு உட்கட்டமைப்புகள்.

இதேபோல தமிழகத்தில் நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்த உட்கட்டமைப்புகள் என்னவென்று பார்ப்போமா?

அதற்கு முன் அமைச்சர் வேலுமணி அவர்கள் விடுத்துள்ள மழை நீர் சவாலை ஏற்றுக் கொள்வோம். தமிழகம் முழுக்க மழை நீர் சேகரிப்பை உறுதி செய்வோம்!

வாருங்கள்...

https://tnwaterwise.com

விளம்பர பகுதி

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon