மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

மதராசப்பட்டிணம் விருந்து : சென்னையின் புதிய உணவுகள் !

மதராசப்பட்டிணம் விருந்து : சென்னையின் புதிய உணவுகள் !

கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 15 வரை ‘மதராசப்பட்டிணம் விருந்து’ என்ற பெயரில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய இந்த கலாசார விழா சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. இந்த விருந்து கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டு பலதரப்பட்ட உணவுப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது. பழங்கால, பாரம்பரிய, கலாச்சார உணவுகளை காட்சிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கைகளால் செய்யப்பட்ட கண்கவர் மிட்டாய்கள், பாரம்பரிய கிராமத்து சமையல் உணவுப்பொருட்கள், பசியைத் தூண்டும் அசைவ உணவுகள், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சைவ சமையல், தித்திப்பூட்டும் இனிப்பு வகைகள் என்று தீவுத் திடல் எங்கும் உணவுப் பொருட்கள் நிறைந்திருந்தது.

சாலையில் செல்வோரையும் தன்வசம் இழுக்கும் விதத்தில் இந்த உணவுத் திருவிழா இருந்தது. அந்த பாரம்பரிய நிகழ்வில் கலந்துகொண்டு மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியின் சார்பில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.

‘மதராசப்பட்டிணம் விருந்து’-கலாச்சார விழாவின் ஒரு சிறுபகுதி குறித்த வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon