மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

ஐயோ ரஜினி சார், அது கமலாலயம் ஸ்கிரிப்டு! :அப்டேட் குமாரு

ஐயோ ரஜினி சார், அது கமலாலயம் ஸ்கிரிப்டு! :அப்டேட் குமாரு

ரஜினி இந்தித் திணிப்பு பத்தி கருத்து சொன்னதும்.... அதே தான், அந்த நண்பனுக்கு ஃபோன் போட்டு ரஜினி பேசிட்டார்னு சொன்னதும் ‘அப்பாடா! எங்காளு பா.ஜ.க. கூட சேரமாட்டார்’னு சந்தோசப்பட்டான். கொஞ்ச நேரத்துல திரும்ப ஃபோன் போட்டு அமித்ஷாவும் ‘நான் அப்டிலாம் சொல்லல. எனக்கே இந்தி தாய்மொழி கிடையாது’ன்னு பல்டி அடிச்சதை சொன்னதும் டென்சன் ஆகிட்டான். ‘டெல்லில இருக்கவங்க என்ன பேசப்போறாங்கன்னு, தமிழ்நாட்டுல இருக்க பா.ஜ.க ஆளுங்களுக்கு தெரியுறதுக்கு முன்ன என் தலைவனுக்கு தெரியுதே என்ன மேட்டரா இருக்கும்?’ அப்படின்னு யோசிச்சிக்கிட்டே ஃபோனை வெச்சவன் தான் எடுக்கவே இல்லை. இவனுக்கு என்ன ஆச்சோன்னு, அவனோட வேலை செய்யுற மருதக்கார நண்பருக்கு ஃபோன் போட்டேன். என்ன தலைவா கால் வைட்டிங்லயே போகுதுன்னு கேட்டா, ‘அட நீ வேற சும்மா இருவே. நான் இங்கிலீஸ் கத்துக்குட்டு ஃபாரீன் வந்தேன். ஆனா, தமிழே தெரியாம 562 பேருக்கு மதுரை ரயில்வே டிபார்ட்மெண்ட்ல போஸ்டிங் போட்ருக்கானுவ. இதைப் படிச்சிட்டு வீட்ல வேற கத்துறாவ. மொதல்ல இந்த ஸ்மார்ட்ஃபோனை அவங்க கைல இருந்து புடுங்கனும்வே’ அப்டின்றாப்ல. அவங்க கைல ஏர் கலப்பையை புடிச்சதால தான் நீ இப்ப ஃபாரீன்ல கெடக்க. இப்பவாச்சும் அவங்க ஸ்மார்ட்ஃபோனை கைல புடிக்கட்டும். ஊர்ல என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியணும்னு தான் பாக்குற எல்லாத்தையும் உன்னோட சம்மந்தப்படுத்தி பாக்குறாங்க. இல்லைன்னா, உனக்கு உன் ஊரு எதுன்ற நியாவகமே இல்லாம போயிரும் பாத்துக்கன்னு சொல்லிட்டு ஃபோனை கட் பண்ணிட்டேன். சரி, நீங்க அப்டேட்டை படிங்க. நான் அடுத்த நண்பனுக்கு ஃபோன் போட்டு, முதல் நண்பன் என்ன ஆனான்னு பாத்துட்டு வர்றேன்.

Kondalsamy

கொஞ்சம் கல்வி கற்று,

வெளிநாடு சென்று கொஞ்சம் காசு பார்த்து,

குறிப்பா இந்த IT-ல வேலை செஞ்சி, கொஞ்சம் வாழ்க்கைத் தரம் உயர்ந்துட்டா பெரியார் தீண்டத்தகாதவர் ஆயிடுவாரு நம்மாளுங்களுக்கு..

வளர்ந்துட்டானாம்....

உள்ளூராட்டக்காரன்

ஒரு மாதம் முழுவதும் அசைவம் உண்ணாமல் இருப்பது உடலுக்கு நல்லது;

துரதிஷ்டவசமாக அதை கடைபிடிக்க முடியாது -புரட்டாசி

மெத்த வீட்டான்

உனக்கென்னப்பா நீ ரஜினி

என்ன வேணும்னாலும் பேசுவ !

Dhruv Rathee

One Nation

One Election

One Language

One Religion

One Party

One State

One Media

One Uniform

One Hairstyle

One Food

One Drink

SJB

நண்பனின் தாயார் அரசு வேலையில் இறந்த கணவரின் பணம் 36 லட்சத்தை இரு மகன்களுக்கும் சமமாய் தர சொன்னார்

கருணை அடிப்டையில் வேலை கிடைத்த என் நண்பனுக்கு 6L

தனியார் வேலை தம்பிக்கு 20L

அம்மாவுக்கு 10L என அனைவர் சம்மதத்துடன்

பிரித்தேன்..

இப்ப என் நண்பன் பேசுவதில்லை!

mohanram.ko

கெஞ்சினா மிஞ்சனும், மிஞ்சினால் கெஞ்சனும் - குடும்ப வாழ்வை வெற்றி பெற செய்யும் சூத்திரம்...

அடப்போங்கையா, 20 வருஷமா நான் மட்டும் தான் கெஞ்சிக்கிட்டு இருக்கேன்

A.P.P.

மோடி உங்கள் வாழ்க்கையில் மாற்றிய ஒரு விஷயத்தைப் பகிருங்களேன்-AnandaVikatan

மகராசன் என் வங்கி கணக்கில் செலுத்திய பதினைந்து லட்சத்தை கொண்டு தொழில் தொடங்கி இன்று முண்ணனி தொழில் அதிபராக மிகவும் செல்வாக்குடன் வாழ்கிறேன்

சௌம்யா :))

நேத்து டாஸ்கல சேரன் உங்களுக்கெல்லாம் அடுத்த டாஸ்க்ல வின் பண்ண முடியும்ல. இதை விட்டுத் தரலாம்லன்னு சொல்லி இருக்கார். அதை டிவில காட்டவே இல்ல. அவர் பண்ற இந்த வேலையெல்லாம் ஏன் மறைக்கறீங்க மக்கள்ட்ட இருந்து? டெலிட்டட் சீன்ல லாஸ் இதை கேட்டதும் ஜாலியா சொன்னேன்னு சமாளிப்பு.

காலா

டேய் எப்டி தான்டா பொண்ணுங்க கூட கடல போட்றிங்க..

எனக்கெல்லாம் ஹாய் னு டைப் பண்ணவே கை கால் எல்லாம் பதறுது..

Hasan Kalifa

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது-ரஜினி.

இனி சூப்பர் ஸ்டார் அவர்கள் பொது மொழியான ஹிந்தியில் மட்டும் படம் நடிப்பார் என நம்புகிறோம்.

SKP KARUNA

தான் அனுபவிக்கும் பதவிக்கான அடித்தளம் அமைத்துத் தந்த தந்தை பெரியார் பிறந்தநாளை மிக கவனமா தவிர்த்தாச்சு! தன்னை வளர்த்தக் கட்சிக்கே அடையாளமான அறிஞர் அண்ணா பிறந்தநாளை மறந்தாச்சு! ஜஸ்ட் போன வருஷம் அறிமுகமாகி “கைகொடுத்த” மோடிக்கு கெஞ்சலோடு பிறந்தநாள் வாழ்த்து! இப்படி ஒரு மனிதரா?

BlitzkriegKK

படையப்பா படத்துல ஒரு சாதாரண காமெடி சீன்ல நாயகியைப் பத்திப் பேசுறப்ப சாத்வீகம்னு சொல்லாமத் தப்பாச் சொல்லுவாங்க காமெடியன் செந்தில் ரமேஷ் கண்ணா.

உடனே ஹீரோ ரஜினி சமஸ்கிருதம் தேவபாஷை அதைத் தவறா உச்சரிக்கக்கூடாதுன்னு கோப முகம் காட்டுவார்.

அதான்டா மொழிக் கொள்கையில ஒரிஜினல் ரஜினி.டாட்.

Arunan Kathiresan

பாபர் மசூதியை வெளியிலிருந்து இடித்தார்கள்.

அம்பேத்கர் தந்த அரசியல் சாசனத்தை

உள்ளிருந்து இடிக்கிறார்கள்!

mohanram.ko

நாளைக்கே உலகம் அழிஞ்சிடும், இனிமே சாப்பிடவே முடியாது என்பது போலவே, புரட்டாசிக்கு முதல் நாள் நான்வெஜ் கடைகளில் அலைமோதும் கூட்டம்

கோழியின் கிறுக்கல்!!

அம்மா பாதி, மாமியார் பாதி கலந்து செய்த கலவை தான் மகள்!!!

anbeSelva

சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி எச்.ராஜா வாயை தொறந்தாரா? புனிதமான கோவிலை ஸ்டார் ஓட்டலாக்கி சம்பாரித்த அசிங்கத்தை கண்டித்து எந்த பார்ப்பன அமைப்பாவது வீதிக்கு வந்ததா?

பார்ப்பனர்களுக்கு எதிரான எந்த விஷயத்திலும் பாஜக RSS இந்து முன்னணி எவ்வளவு சைலண்டாக இருக்கிறார்கள் என்று கவனியுங்கள்

உள்ளூராட்டக்காரன்

ஆபீஸ் குரூப்ல இருக்குற முக்கியமான உயரதிகாரிக்கு பிறந்த நாள்னு தெரிஞ்சா போதுமே...

விழுந்து விழுந்து வரிசையா வாழ்த்து சொல்லுவீங்களே..?!

செந்திலின்_கிறுக்கல்கள்

புதுசா வேலையில் சேரும் பொழுது முதல்வன் அர்ஜீன் மாதிரி சூளுரைத்தாலும் டீம் லீடரா ப்ரோமோஷன் ஆனதும் வில்லன் ரகுவரனா மாறிடுவது டிசைன்!

எனக்கொரு டவுட்டு ⁉

அம்மாவின் சமையலில் உப்பு காரம் சில சமயங்களில் இல்லாமல் இருக்கலாம் ஆனா நிச்சயமாக முடி இருக்கும்..!

தமிழன்டா

அன்று "காங்கிரஸ் இல்லாத பாரதம்" என்றார்கள்

இன்று "கட்சிகள் இல்லாத பாரதம்" என்கிறார்கள்

இனி "தேர்தலே இல்லாத பாரதம்" என்பார்கள்

பாசிசம் தனது உச்சாணிக்கொம்பில் அமர்ந்து ஜனநாயகத்தை நகைக்கிறது

A.P.P.

இருபது வருசத்துக்கு முன்னால சாமியார் ஆனவங்க எல்லாம் கோடீஸ்வரனா திராயுறாங்க.

இருபது வருசமா வேலைக்கு போனவங்க பொருளாதார மந்தநிலையினால வேலையிழந்து குடும்பத்தோட வீதியில நிக்காங்க.

-லாக் ஆஃப்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon