மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

யார் பெரியார்? 

யார் பெரியார்? 

செப்டம்பர் 17ஆம் தேதி, தமிழகம் போற்றும் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா பலதரப்பட்ட மக்களாலும் கொண்டாடப்பட்டது.

சமூக சீர்திருத்தத்துக்காகவும், சாதி வேற்றுமையைக் களைந்து, மூடநம்பிக்கைகளில் சிக்குண்டு கிடந்த மக்களை அதிலிருந்து மீட்டெடுக்கவும் போராடியவர் தந்தை பெரியார். பெண் விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். தமிழக அரசியலில் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தவர். சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துப் பகுத்தறிவைக் கற்பித்தவர்.

அவர் தன்னைப் பற்றிக் கூறும்போது, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற் போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய மாபெரும் தலைவரை இன்றைய தமிழக மக்கள் எந்த அளவு அறிந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய, யார் பெரியார்?' என்ற கேள்வியை, அவரது பிறந்த தினத்தன்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியின் சார்பாக பல தரப்பட்ட மக்களிடம் கேட்டோம்.

அந்தப் பதில்கள் அடங்கிய முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon