மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

அதிபராக ஆசைப்படும் சபாநாயகர்!

அதிபராக ஆசைப்படும் சபாநாயகர்!

இலங்கையில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடக்கலாம் என்ற நிலையில், ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்‌ஷே தனது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்‌ஷேவை அதிபர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். அதேநேரம் அந்தக் கட்சியின் துணைத் தலைவரான சஜித் பிரேமதாசாவும் தன் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க முயற்சித்து வருகிறார்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே மூன்றாவது போட்டியாக தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, தானும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளார். ”நான் அதிபர் தேர்தல் போட்டியில் இறங்கினால் அதிபருக்கான பிரத்யேக அதிகாரங்களைக் குறைப்பேன். அதிகாரத்தை அனுபவிப்பதற்காக போட்டியிடவில்லை. அதிகாரத்தை மட்டுப்படுத்தவே போட்டியிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு இலங்கையில் நிலவிய உச்சகட்ட அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர பெரிதும் முயன்றவர் சபாநாயகர் கரு ஜெயசூர்யா என்பது குறிப்பிடத் தக்கது. அவரது முடிவையடுத்து இலங்கை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon