மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது: ரஜினி

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது: ரஜினி

வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தி அலுவல் மொழி ஆக்கப்பட்ட தினமான கடந்த 14ஆம் தேதி உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரு பொதுமொழி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்தியாவை இந்தியால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும். எனவே, மக்கள் தங்கள் தாய் மொழியுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 20ஆம் தேதி திமுக போராட்டங்கள் நடத்தவுள்ளது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அமித் ஷாவின் கருத்து தொடர்பாக பதிலளித்தார்.

“எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை, வளர்ச்சிக்கு அது நல்லதாக இருக்கும். ஆனால், துரதிருஷ்ட வசமாக நமது நாட்டில் பொதுமொழியைக் கொண்டுவர முடியாது. இந்தியாவில் எந்த மொழியையும் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல வடமாநிலங்களில் கூட அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், பேனர்கள் வைக்கக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு முன்பே உத்தரவிட்டுவிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon